[08-12-2025] இன்றைய முக்கிய செய்திகள் :பல்லடம் :திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான கழிவு பஞ்சு குடோன் செயல்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.அவிநாசி: மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற புதன்கிழமை (10-12-2025) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது | இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பங்கேற்று குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாகவும் இதில் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றார்.திருப்பூர்: பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான பாலிபேக் தயாரிப்பில், திருப்பூர் தன்னிறைவு பெற்றுள்ளது..உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு, 4 நாட்களுக்குப்பின் நேற்று அனுமதியளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.புதுச்சேரி: கரூர் சம்பவத்தையடுத்து 2 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை நாளை மறுநாள் (டிச.9) விஜய் சந்திக்கிறார் | பிரச்சார வாகனத்தில் நின்று பேசவுள்ளார் | இந்த பொதுக்கூட்டத்தில் மேடையும் இல்லை, தொண்டர்களுக்கு இருக்கையும் இல்லை, க்யூ ஆர் கோடு நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மதுரை: “திருப்பரங்குன்றத்தில் தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது | நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம் | இப்படிப்பட்ட அரசை, ஆன்மிகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.விசாகப்பட்டினம்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது